My Blog

Just another WordPress.com weblog

காசி வாரணாசி யாத்திரை

சம்பிரதாய முறைப்படியான காசி வாரணாசி யாத்திரை

தென்னாட்டிலிருந்து காசி யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று சங்கல்பம் செய்து, அக்னி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, கடலில் மூழ்கி மணல் எடுத்து பின்னர் மூதாதையருக்கு சிரார்த்த காரியங்களை செய்து பிதுர் தர்ப்பணம் முடித்து, ராமநாத சுவாமி கோயிலில் உள்ள மற்ற 21 தீர்த்தத்திலும் நீராடி, ராமநாதசுவாமி தரிசனம் முடித்தபின்னர்,

அக்னி தீர்த்தத்தில் எடுத்த மணலை பத்திரமாக பூஜை செய்து, காசி யாத்திரை ஆரம்பித்த பின்னர் முதலில் பிரயாகைதிரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்து, ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த மணலை கரைத்தபின்னர்,

காசி சென்று, கங்கையில் ஸ்நானம் செய்து, காசி விஸ்வேஸ்வரர், அன்னபூரணி, விசாலாட்சி மற்ற தெய்வங்களை தரிசித்து பிறகு கடைசியாக காலபைரவரை தரிசித்து ஆசி பெற்று விடை பெற்று,

பிறகு கயாவிற்கு சென்று மறைந்த மூதாதையர்களுக்கு சிரார்த்தங்களை செய்து மீண்டும் திரிவேணி சங்கமம் வந்து கங்கையில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு பின்னர் ராமேஸ்வரம் சென்று ராமேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தால் தான் காசி யாத்திரை பூர்த்தியாகும்.

சம்பிரதாயப்படி இப்படி தான் செய்யவேண்டும் இருந்தாலும் இன்றைய அவசர உலகத்தில் யாத்ரீகர்கள் செளகர்யத்தை உத்தேசித்து சிலவற்றை கடைபிடிக்க முடியவில்லை.

காசி பிரயாகை கயா யாத்திரை செல்ல முடிவேடுத்தபின்னர், சம்பிரதாயமாக எவ்வாறு செல்வது என்று புத்தகங்களிலும் வலைத்தளங்களிலும் பார்த்து அறிந்து அதற்கேற்றவாறு பயணத்தை அமைத்துக்கொண்டோம்,

சேலத்திலிருந்து காசி சென்றடைய 2000௦௦௦ கிலோ மீட்டர் பயணம் தான். முதலிலேயே ரயிலில் படுக்கை வசதி போக வர பதிவு செய்திருந்ததால் நிம்மதியாக சென்று வர முடிந்தது. சைவ சாப்பாடு ஆனதால் வழி பயணத்தில் சாப்பாட்டிற்கு சிறிது கஷ்ட்டப்பட வேண்டியதாகிவிட்டது பால், தயிர், லஸ்சி, மோர், பழம் என்று கிடைப்பதை சாப்பிட்டு சமாளித்தோம். நாற்ப்பது பயணிகளுடன் பயணித்த அனுபவம், இறை இன்பம் அனைத்தும் சுகானுபவமே.. அதை அனுபவத்தில்தான் உணர முடியும்.

காசி உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. காசி நகர் புனிதமான கங்கை கரையின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது மோசல் சராய் ரயில் நிலையத்திலிருந்து 15 கி மீ தொலைவில் வாரணாசி ரயில் நிலையம் உள்ளது. காசி வாரணாசி (பனாரஸ்) அனைத்தும் ஒன்று தான் . அருகிலேயே உள்ளது .இவ்விரண்டு இடங்களிலும் ரயில் ஏறி இறங்கலாம் காசி ரயில் நிலையத்திலிருந்து விஸ்வநாதர் ஆலயம் 3 கி மீ தூரம் தான்.

வருணா ஆசி ஆகிய இரு நதிகளின் சங்கமத்தளம் ஆதலால் வாரணாசி என்று பெயர். ஜோதிலிங்க முக்தி தரும் தலங்களில் எழில் ஒன்று.

ராமேஸ்வரம், காசி, பிரயாகை என்னும் அலகாபாத், கயா முதலியவற்றை தரிசித்து இறை அனுபவமும் மனநிம்மதியும் பாபங்கள் விலகி, தோஷ சாந்தி ஏற்ப்பட்ட நிம்மதி பெற எனக்கு 60ஆண்டுகள் தேவைப்பட்டது.

காசியில் இருந்து திரும்ப வந்தவுடன் என்ன்னுடைய ஷஷ்டியப்த பூர்த்தி வந்த நாளும் நீங்காத நினைவுகள் தான்.. பயணம் தொடரட்டும் எப்பொழுது அடுத்த பயணம் செல்லலாம் என்று உறவினர்களும் பயண நண்பர்களும் தொடர்ந்து விசாரிக்கும்பொது ஏற்படும் சந்தோசம் சந்தோசம் சந்தோசம் தான் மாற்றமில்லை..

நாற்பது பயணிகளுடன் ஒன்பது நாட்கள் பயணித்த அனுபவம் மறக்க இயலாதது. ஒவ்வொருவரும் காட்டிய அன்பு, நட்பு ,உதவியது ஆகியவற்றிற்கு எல்லையில்லை.

Advertisements

ஒக்ரோபர்7, 2009 - Posted by | சம்பிரதாய முறைப்படியான காசி வாரணாசி யாத்திரை

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: