My Blog

Just another WordPress.com weblog


மணிகர்ணிகா/அரிசசந்த்திரா காட்

மணிகர்ணிகா/அரிசசந்த்திரா காட் நம் கண்ணெதிரே வெகு அருகிலேயே சடலங்கள் அடுத்தடுத்து எரிக்கப்படுவதை காண்கிறோம் சுடுகாட்டின் அருகில் நிற்கிறோம் என்கின் அருவருப்போ அச்சமோ தீட்டு என்கின்ற என்னமோ இல்லை பிணம் எரிக்கப்படும் துர்நாற்றமும் இல்லை.

சடலத்தை கங்கையில் முக்கிவிட்டு ஈரம் சற்று வடிவதற்க்காக தரையில் கிடத்தி உற்றார் உறவினர் அமர்ந்திருக்க தீ மூட்டும் உரிமை உள்ளவர் மொட்டை அடித்துக்கொள்கிறார் தகனம் செய்பவர் தயார் என்று சொன்னவுடன் சடலம் மேடைக்கு எடுத்துச்செல்லப்பட்டு சதா எரிந்து கொண்டிருக்கும் அக்னியிலிருந்து தீ எடுத்து சவத்திற்கு மகன் அல்லது உரிமையுள்ளவராலோ தீ வைக்கப்படுகிறது சரீரம் ஒரு மணி நேரத்தில் பிடி சாம்பலாகி விடுகிறது அந்த சாம்பலை கங்கையில் கரைத்து விடுகிறார்கள்.

இத்தத்தில் இறப்பவர்க்கு விஸ்வநாதர் தாரக மந்திரத்தை உபதேசித்து முக்தி அளிக்கின்றார் என்பது சாஸ்திரம்

மணிகர்ணிகாவில் ஸ்நானம் செய்பவர்கள் மகா சங்கல்பம், பிராயசித்தம், அனுக்ஜை, பலதானம், எல்லாம் செய்கின்றனர். சந்தியாவந்தனம் முதலியவற்றை முடித்துக் கொண்டு. சந்தர்ப்பனை செய்யும் வழக்கம் உள்ளது. சிலர் தான தர்மங்களும் செய்கிறார்கள். வபனம் செய்து கொண்டு நமது சரீரத்தை அங்கு விடுவதற்கு அடையாளமாக அணிந்திருந்த வேட்டியை அங்கேயே நதியில் விட்டு விடுகிறார்கள்.

மணிகர்ணிகை கரையில் செய்வது ஹிரண்ய சிரார்த்தம். தீர்த்தக் கரையில் ஹிரண்ய சிரார்த்தம் தான் செய்ய வேண்டும். அனுமான் காட்டில் உள்ள இல்லங்களில் செய்யப்படும் திதி அன்ன சிரார்த்தம். நீத்தார் கடன் செய்தோர் அருகிலுள்ள ஏதேனும் ஒரு ஓட்டலில் பணம் கொடுத்து அவர்கள் சக்திக்கேற்றவாறு ஒன்று முதல் நூறு பேர் வரை அன்னதானமளிக்க ஏற்ப்பாடு செய்கின்றனர். சாப்பாடு அல்லது டிபன் எது வேண்டுமானாலும் இருக்கலாம். அதனால் ஓட்டலிலும் இலவசமாக சாப்பிடலாம்.

காசிக்கு சென்று கங்கையில் நீராடினால் பாவங்கள் எல்லாம் தொலைந்து விடும் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருகிறது. அந்தக் காலத்தில் பணவசதி படைத்தவர்கள் வேதம் கற்றவர்கள் மட்டும் காசிக்கு தீர்த்த யாத்திரை சென்று அங்கேயே முக்தியும் அடைந்தனர். இறுதி காலத்தை அங்கேயே கழித்து காசியில் மரணமடைவதையும் பெறும் பேராக கருதினர். தற்போது அனைத்து தரப்பினரும் யாத்திரை புரிகின்றனர். புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து தோஷத்தில் இருந்து விடுபடுவதுடன் முன்னோர்களை வழிபாடு செய்யும் போது அவர்களின் ஆசியும் கிடைக்கிறது.

காசியில் இறப்போர்க்கு மட்டுமின்றி காசிக்கு வெளியில் தொலைவில் இறந்திருந்தாலும் அவரது அஸ்தியை காசியில் கங்கையில் கரைத்து ஈமக்கிரியைகள் செய்தவுடன் அவர்களுக்கும் முக்தி கிடைக்கிறது.

காசி விஸ்வநாதரை தரிசிப்பதற்கும் கங்கையில் குளிப்பதற்கும் நல்ல திடகாத்திரமான உடல் நிலை தேவை. ஒய்வு காலத்தில் செல்ல வேண்டிய இடங்கள் என்று ஒதுக்கி வைக்காமல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்போதே தம்பதியராக காசி ராமேஸ்வரம் யாத்திரை சென்று வருவது நலம் பயிக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. கங்கை அடைய உதவும் படிக்கட்டுகள் வழுக்குமாதலால் துணையின் கைபிடித்து செல்வது நல்லது.

Advertisements

ஒக்ரோபர்7, 2009 - Posted by | மணிகர்ணிகா/அரிசசந்த்திரா காட்

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: